பெங்களூரு: தடைகளை மீறி, கர்நாடகாவில் பாஜக எம்பியின் மகன், திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட போவதாக அறிவித்துள்ளது, பரபரப்பை கூட்டியிருக்கிறது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக அரசர் திப்பு சுல்தான். அவரது பிறந்த தினம், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் ஆட்சியில் அறிவிப்பு வெளியானது. அதை பாஜக கடுமையாக எதிர்த்தது.

அவர் சிறுபான்மையினர், பிரிட்டிஷாரை எதிர்த்தவர் என்பதால் பாஜக இவ்வாறு செயல்படுகிறது என்று காங்கிரஸ் கூறியது. அதன் பிறகு கடந்த ஜூலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது.

உடனடியாக, திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந் நிலையில் திப்புசுல்தான் ஜெயந்தி விழாவை கொண்டாட போவதாக பாஜக எம்பியான பச்சே கவுடா மகனும், பாஜக இளைஞர் அணி தலைவருமான சரத் பச்சே கவுடா அறிவித்திருக்கிறார். அவரின் இந்த செயல், பெரும் அதிர் வலைகளை ஏற்டுத்தி உள்ளது.

அண்மைக்காலமாக பாஜக எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்கி இருக்கிறார். 2018ம் ஆண்டு வேட்பாளராக களம் இறங்கி காங்கிரசின் நாகராஜ் என்பவரிடம் தோற்றார்.