Random image

டில்லியில் நாளை பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

டில்லி:
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளை டில்லியில் தொடங்குகிறது.

தெலங்கானா உள்பட 6 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள சூழ்நிலையில் பா.ஜ.க. தேசிய செயற்குழு நாளை டில்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்குகிறது. 2 நாடகள் இந்த கூட்டம் தேசிய தலைவர் அமித் ஷா உரையுடன் தொடங்கும் என தெரிகிறது.

இதில் பெட்ரோல் விலை உயர்வு, தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அங்கீகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 2ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நிறைவுரையாற்றுகிறார்.