இப்போது கமல்நாத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் அப்போதைய அறிவிப்பு

க்னோ

மல்நாத் உள்ளூர் மக்களுக்கே பணியில் முதல் உரிமை என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவும் முன்பு அதையே அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.   அம்மாநில முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றுள்ளார்.   அவர் தனது பதவி ஏற்பு விழாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல வேலை வாய்ப்புகள் உத்திரப் பிரதேசத்தில் இருந்து குடி பெயர்பவர்களுக்கு செல்வதால் 70% வேலை வாய்ப்புக்கள் உள்ளூர் மக்களுக்கே அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   காங்கிரசின் கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளன.   பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மகேந்திர நாத் பாண்டே உள்ளிட்ட பல தலைவர்கள் இதை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குகடும்கண்டனம் தெரிவித்துள்ளர்.  அவர் கமல்நாத் இவ்வாறு கூறுவது நாட்டை பிரிக்க காங்கிரஸ் செய்யும் சதி என கூறி உள்ளார்.  அது மட்டுமின்றி இவ்வாறு ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்வது காங்கிரசுக்கு வழக்கமான ஒன்று என கூறி உள்ளார்.

ஆனால் கமல்நாத் கூறியதை தேர்தல் அறிக்கையாகவே பாஜக கடந்த 2017 உத்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அறிவித்துள்ளது.   அந்த அறிக்கையில் மக்களின் நலத்திட்டங்களில் ஒன்றாக உத்திரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் 90% வேலை வாய்ப்பு உத்டிர பிரதேச மக்களுக்கு அளிக்கபடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வாய்ப்பு என்னும் பகுதியின் கீழ் பாஜக ஆட்சி அமைத்தால் இளைஞர்களுக்காக பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்ளூர் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை என்னும்நிலை உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி