சென்னை சூப்பர் மார்க்கெட் சூறையாடல் – லட்சக்கணக்கில் கொள்ளை :  பாஜகவினர் கைது

சென்னை

யிரம் விளக்கு பகுதியில் இன்று காலை சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்ததாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் காதர் நவாஸ்கான் சாலஒஇயில் ரஃபீகா என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.   இங்கு ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் ரஃபீகாவுக்கு கடை வாடகை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  ரஃபீகா கடையை காலி செய்யுமாறு அடிக்கடி தக்ராறில் ஈடுபட்டுள்ளார்.

ஷாநவாஸ் தரப்பில் கடையை காலி செய்ய இன்னும் 2 வருடங்கள் உள்ளதாகவும் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளதாகவும் கூறி கடையை காலி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.   கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்ள நிலையில் இன்று காலை  ஊழியர்கள் கடையைத் திறந்த சில நிமிடங்களில் 10க்கும் மேற்பட்டவர் தடாலடியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

அவர்கள் சுத்தியல் ஸ்பேனர் போன்றவற்றால் சிசிடிவி காமிராக்களை அடித்து நொறுக்கி விட்டு கடையில் உள்ள பொருட்களை சூறையாடத் தொடங்கி உள்ளனர்  அவ்வாறு சூறையாடிய லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்களை ஒரு லோடு ஆட்டோவில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.  இதைத் தடுத்த குதூப் என்னும் ஊழியரை அவர்கள் கீழே தள்ளியதில் நெஞ்சுவலி ஏற்பட்டு விழுந்துள்ளார்.

கடை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறைக்குத் தகவல் அனுப்பி உள்ளனர்.  ஆனால் வந்தவர்கள் காவல்துறையினர் வருவதற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.  எனவே அப்போது கடையில் இருந்த 21 பேரை காவல்துறையினர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது சூறையாடிய நபர்கள் பாஜகவின ஊடகப்பிரிவு மற்றும் கலை இலக்கிய  பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.  இவர்கள் டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 10க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதன் பின்னணியில் ரஃபீகா இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

You may have missed