தேர்தல் பிரச்சாரத்தில் தடுக்கி விழுந்தார் பாஜக தலைவர் அமித் ஷா!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது தடுக்கி விழுந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

AMITH

இம்மாத இறுதியில் மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தை ஆளும் பாஜகவும், எதிர்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொண்டர்.

பிரச்சாரத்திற்கு வந்த அமித் ஷா வாகனத்தில் இருந்து கீழே இறங்க முயன்ற போது தடுக்கி விழுந்தார். அவர் விழுந்ததும் அருகிலிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்படாவிட்டாலும், அவர் விழுந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.