டில்லி:

டைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் பா.ஜ. சார்பில் போட்டியிடும், முன்னாள் ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பா.ஜ.க தலைமையிலான ஜனநாயக கூட்டணி வேட்பாளரக ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இன்று அமாவாசை தினமாகையால் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.