லக்னோ:

பாஜகவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார்.


பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் நடிகர் சத்ருகன் சின்ஹா, அக்கட்சியிலிருந்து விலகி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைகிறார்.

இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் இறுதி செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்ருகன் சின்ஹா திரைப்பட பிரபலம் என்பதால் தங்களுக்கு சாதகமாக அமையும் என சமாஜ்வாதி கட்சி எண்ணுகிறது.

சத்ருகன் சின்ஹா கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் வெற்றி பெற்றார். கடந்த 2003-04 -ம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

தற்போது சமாஜ்வாதி கட்சி சார்பில் வாரணாசி, லக்னோ, காஜியாபாத் அல்லது கான்பூரில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.