டில்லி

 

பயங்கரவாத நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குக் கிடைத்த நன்கொடை குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணைய்த்திட்ம் வழங்க வேண்டும் என்பது  சட்டமாகும்.  இதன்படி பாஜக தனது நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளது.   அதில் பாஜகவுக்கு நன்கொடையாகச் சென்ற அண்டு ரூ.743 கோடி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.   இது மற்ற அனைத்துக் கட்சிகளைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

இதில் அதிகபட்சமாக டாடா குழும நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூ.357 கோடி நன்கொடை பெற்றுள்ளது.   இவ்வரிசையில் ஆர் கே டபிள்யூ டெவலப்பர்ஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூ.10 கோடி நன்கொடை பெற்றுள்ளது.   இந்நிறுவனம் தற்போது அமலாக்கத்துறையின் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக குற்றச்சாட்டில் தீவிர விசாரணையில் உள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் முக்கியமான குற்றவாளியும்  நிழல் உலக தாத தாவூத் இப்ராகிம் கூட்டாளியுமான இக்பால் மிர்ச்சியிடம் இந்நிறுவனம் நிலம் வாங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் மூலம் நிதி உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பல நிறுவனங்களும் பாஜகவுக்குத் தேர்தல் நிதியாகப் பல கோடிகள் வழங்கி உள்ளன.    அவற்றில் ஒன்றாக ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸையும் பாஜக கணக்கில் காட்டி உள்ளது.

இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் பிந்த்ரா ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த நிறுவனம் டி எச் எஃப் எல் நிறுவனத்தின் சார்பு நிறுவனம் என்பதும் டி எச் எஃப் எல் நிறுவனமும் கடன் மோசடி செய்துள்ளது என்பதாக ரிச்ர்வ் வங்கி திவால் நடவடிக்கை எடுக்க உள்ளது.

அத்துடன் இக்பால் மிர்ச்சியிசம் நிலம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு நிறுவனம் சன்பிளிங் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.  இந்நிறுவனத்திடம் இருந்தும் பாஜக ரூ.2 கோடி நன்கொடை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : தி ஒயர்