கர்நாடகா தேர்தல்….பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. இதையடுத்து பா.ஜ.க 82 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.