உத்தரபிரதேச மேலவை தேர்தல்….பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லக்னோ:

உத்தரபிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் 13 பேரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கு 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்துக்கேற்ப மேலவை தேர்தலில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். ஆளும்கட்சி சார்பில் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில் 2 பேர் புதியவர்கள்.