சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல்களம்: 57 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், பாஜக வெளியீடு

--

டெல்லி: டெல்லி சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட சபைக்கு வரும் 8ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய  கடைசி நாள் ஜனவரி 21 ஆகும். பிப்ரவரி 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது. கடந்த 14ம் தேதியன்று ஆளும் கட்சியான் ஆம் ஆத்மி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில், பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 70 இடங்களில் 57 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த பட்டியலை டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வெளியிட்டுள்ளார். 57 இடங்களில் 4 பேர் பெண்களாவார். 11 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டயிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.