புவனேஷ்வர்:

டிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 100 100 வேட்பாளர்களின் பெயர்  பட்டியலை வெளி யிட்டுள்ளது அகில இந்திய பாரதியஜனதா கட்சி.

ஒடிசா மாநிலத்தில்  மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல், 4 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆதரவுடன் பிஜு ஜனதா தள ஆட்சி நடைபெற்று வந்தது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தது.  இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதன் காரணமாக போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா  மக்களவை மற்றும் சட்டப்பேரவை ஆகிய 2 தேர்தலிலும் காங்கிரஸுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸுடன் ஜே.எம்.எம். கட்சி கூட்டணி அமைத்துள்ளது. எனினும், அவற்றுக்கு இடையே தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்படவில்லை. அதற்குள் ஜேஎம்எம் கட்சியின் தலைவர் சிபு சோரனின் மகளான அஞ்சனி, மயூர் பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என ஜே.எம்.எம். தலைமை அறிவித்துள்ளது.

ஒடிசாவை பொறுத்தவரை, அங்கு ஆளும் பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில்,  பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) சட்டசபை தேர்தலில் 100 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி, 147 தொகுதிகளில் போட்டியிட்டு,  10 இடங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.