இமாசல பிரதேச அரசு திட்ட பயனாளிகள் வீட்டில் பாஜக கொடி : பாஜக கோரிக்கை

சிம்லா

த்திய மற்றும் மாநில அரசு திட்ட பயனாளிகள் தங்கள் வீட்டில் பாஜக கொடியை பறக்க விட வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாஜகவின் சார்பில் நாடெங்கும் புது விதமான தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.    “எனது குடும்பம் – பாஜக குடும்பம்” என்னும் அந்த பிரசார திட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் பாஜக கொடியை வரும் மார்ச் மாதம் 3  ஆம் தேதி வரை பறக்க விட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.   நேற்று அம்மாநில பாஜக தலைவர் சாய்பால் சிங், “இமாசலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசின் நல திட்டங்களால் இம் மாநிலத்தில் 8.5 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.    அந்த குடும்பங்களை விரைவில் பாஜக தொண்டர்கள் அணுகி மக்களவை தேர்தலில் ஆதரவு கோர உள்ளனர்.

அவர்களிடம் பாஜக வின் சாதனை அறிக்கைகளை அளிக்க உள்ளோம்.   அந்த சாதனைகளால் அந்த 8.5 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதை அவர்களுக்கு எடுத்துக் கூற திட்டமிட்டுள்ளோம்.   அதைப் போல அவர்கள் எங்களுக்கு ஆதரவு காட்டுவதை எடுத்துக்காட்ட அவர்கள் வீடுகளில் பாஜக கொடியை பறக்க விட வேண்டும் என கோரிக்கை எழுப்ப உள்ளோம்.” என செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

இதற்கு அம்மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இன்று அவர், “அரசின் திட்டங்களை காட்டி வாக்கு கேட்கும் அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்துள்ளது.   இது அவமானகரமானது.   அரசின் நிதியை இது தவறாகப் பயன்படுத்தி அரசியல ஆதாயம் தேடும் செயலாகும்” என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.