டில்லி:

த்திய  பாஜக அரசு ரூ.1000 கோடி ஊழல் செய்துள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து  அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“டில்லியில் முறையான வகையில், துப்புரவுப் பணிகள்  நடக்கவில்லை. மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம், துப்புரவு பணிக்கான  ஒப்பந்தங்களை சரிவர அமல்படுத்த தவறிவிட்டது.

ஆகவே டில்லி முழுவதும் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. மேலும்  சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல வகையான கட்டுமானப் பணிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். இதுபற்றி மத்திய கணக்கு தணிக்கையாளரான சிஏஜி அறிக்கையும் வெளியிட்டுள்ளது,’’ என்ற  மணிஷ் சிசோடியா, “இப்டி கட்டுமான பணிகளில் கை மாறியுள்ள லஞ்சத்தொகை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும்” என்றும் தெரிவித்தார்.