கர்நாடகாவில் பாஜ ஆட்சி…: 17ந்தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் எடியூரப்பா…?

எடியூரப்பா

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வருகிறது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், காங்கிரசும், பாரதியஜனதாவும் சம அளவிலேயே முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது பாஜக காங்கிரசை விட 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு கடந்த 12-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.4 வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில், பாரதியஜனதா கட்சி கர்நாடகாவில் முன்னிலையில் வந்துகொண்டிருக்கிறது. இதன  காரணமாக கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது.

பாஜக முன்னிலை காரணமாக  கர்நாடக மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் இப்போதே வான வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாட தொடங்கி உள்ளனர்.

பாஜ தொண்டர்கள் உற்சாகம்

பெங்களுருவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. வட கர்நாடகாவில் பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தாரமை யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகித்து வருகிறார்.  இந்நிலை யில், தேர்தலுக்கு முன்பே சொன்னபடி, எடியூரப்பா, வரும் 17ந்தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், அதற்காக பெங்களூருவில்  கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி  வருகின்றன.