சென்னை,

மிழகம் முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை  தாம்பரத்தில் நடைபெடறற ஆர்ப்பாட்டத்தின் போது திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்  உரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும்  அனிதா தற்கொலை செய்து கொண்டாலும் நீட் தேர்வால் நடந்த படுகொலை என அவர் குற்றம்சாட்டினார். நெருக்கடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனிதா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அனிதா மரணத்துக்கு பொறுபேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். . தமிழக அரசின் அலட்சியமும் அனிதா தற்கொலைக்கு முக்கிய காரணம் என்றார்.

நீட்டுக்கு எதிரான  அடுத்த கட்ட போராட்டம் அரசை அச்சுறுத்தும் போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்த ஸ்டாலின்,  மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்த காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா தற்கொலைக்கு பிறகாவது முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டசபையில் நீட் குறித்து கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்கள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,  நீட் தேர்வுக்கு ஒராண்டு  விலக்கு கொடுக்கலாம்  என்று உறுதிமொழி அளித்த  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனிதாவின் சாவுக்கு பதில் கூற வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நாடு முழுவதும்  நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. அப்போது, திமுக தலைவர் கருணா நிதி எதிர்ப்பு தெரிவித்தார் என்றும், நீட்டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது என்று கூறிய ஸ்டாலின், தற்போதைய பா.ஜ. ஆட்சிதான் நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், தமிழக அரசு  நீட் தேர்வுக்கு எதிராக  என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.3 லட்சம் கேட்டால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் எப்படி செலுத்த முடியும்.

இன்றைய போராட்டம் அரசியலுக்கானது அல்ல. மாணவர்களுக்கான போராட்டம். தற்போதைய நெருக்கடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும்,   கவிஞர் பழனிபாரதியின் செத்து செத்து பிறக்குது புதிய இந்தியா கவிதையையும் அவர் வாசித்து காண்பித்தார். இந்த கவிதை தற்போது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதால், அதனை மீண்டும் கூட்ட கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும். சட்டசபை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தோம். ஏற்கனவே இரண்டு முறை கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும்,   இரண்டாவது முறை சந்தித்தபோது, இதுவே கடைசி முறை என்று கெடு விதிப்பதாக தெரிவித்தும்,  கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் மும்பை சென்று விட்டார்.

கவர்னரின்  அலட்சியம் காரணமாகத்தான் தற்போது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சாதகமாக வந்தாலும், எதிராக வந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.