பாஜகவின் ஆட்சி அடுத்த 50 ஆண்டுகள் தொடரும் : அமித்ஷா

டில்லி

பாஜகவின் ஆட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு தொடரும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறி உல்ளார்.

நேற்றும் அதற்கு முந்தைய தினமும் டில்லில் பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது.   நேற்று இந்த கூட்டத்தின் நிறைவு நாள் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.  பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா, மற்றும் பல மூத்த தலைவர்கள் உரையாற்றினார்கள்

இந்த கூட்டத்தில் அமித்ஷா தனது உரையில், “நடைபெற உள்ள 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.  பாஜகவின் ஆட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடக்கும்.   பாஜகவை யாராலும் தூக்கி வீசி விச முடியாது.   மத்திய அரசும் சரி,பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசும் சரி, பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளனர்.

எனவே வரும் 2019 ஆம் ஆண்டில் பாஜக அமோக வெற்றிபெறும்.  நாட்டில் தற்போது அரசியல் என்பது நம்பிக்கை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.   குஜராத் முதல்வராக கடந்த 2001 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்றார்.   அதில் இருந்து அம்மாநிலத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்கிறது.  இதற்கு பாஜகவின் சிறந்த செயல்பாடு மட்டுமே காரணம்” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP rule will continue for next 50 years : Amit Shah
-=-