தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?: டி.ஆர் தாக்கு

 

 

 

சென்னை:

தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நடிகர், இயக்குநர் மற்றும் லட்சிய திமுகவின் தலைவருமான டி ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் “கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக தமிழர்களுக்கு பாஜக வேட்டு வைக்கிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?” என்று கேள்வி எழுப்பினார்.

தவிர, “நாளை திமுக நடத்தும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும்” என்று டி ராஜேந்தர் அறிவித்தார்.

 

You may have missed