Random image

பாராளுமன்றத்தை கேலிக் கூத்தாக்கிய பாஜக பெண் எம் பி

டில்லி

ட  ஒதுக்கீடு விவாதம் நடக்கும் போது பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் கிரண் கேர் அதை கவனியாமல் விளையாடி உள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   கடந்த செவ்வாய் அன்று  இந்த மசோதா தாக்கலின் போது கடும் விவாதம் நடந்தது.   அனைத்து உறுப்பினர்களும் தீவிரமாக விவாதம் செய்தும் விவாதத்தை உன்னிப்பாக கவனித்த வண்ணமும் இருந்தனர்.

பாஜகவின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான கிரண் கேர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் பிரபல திரைப்பட நடிகர் அனுபம் கேர் மனைவி ஆவார்.  இவர் நடிப்பில் பல விருதுகள் பெற்றுள்ளார்.   இந்த விவாதம் நடக்கும் போது கிரண் கேர் முகத்தில் விதம் விதமான சேட்டைகள் செய்துள்ளார்.

அத்துடன்  பள்ளிகளில் சிறு பிள்ளைகள் ஆசிரியருக்கு தெரியாமல் முகத்தை கோணுவது போல் வைத்துக் கொள்வதுமாக இருந்துள்ளார்.  கிரண் கேரின் இந்த செய்கையை ஊடகங்கள் வீடியோ படமாக்கி வெளியிட்டுள்ளன.

ஆளும் கட்சியின் முக்கிய சட்ட மசோதா விவாதம் நடக்கும் போது அக்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சேட்டை செய்ததாக காணப்படும்  இந்த வீடியோ மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.