ஹர்திக் பட்டேலின் செல்வாக்கைக் கண்டு பாஜக அதிர்ச்சி?

அகமதாபாத்

      குஜராத் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகக் கார்திக் பட்டேல் மாறுவார் என்னும் அறிவிப்பை குஜராத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை கார்திக் பட்டேல் பெற்றுக் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது என்றாலும், பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. குஜராத் அரசியலில் தனது முக்கியத்துவத்தை இதன் மூலம் கார்திக் பட்டேல் நிறுவியுள்ளார்.முக்கிய தொகுதிகளில் எல்லாம் பாஜகவுடன் போட்டியிட்டு காங்கிரஸ் தோற்றது என்றாலும் அதிக வாக்குகளைக் காங்கிரஸ் பெற்றுள்ளது.  பட்டேல் சமூகத்தின் ஆதரவோடு காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது என்பது பாஜகவை யோசிக்க வைக்கும். 2012 – ல் பட்டேல் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் பாஜக பெற்ற வாக்குகளையும், இத்தேர்தலில் பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாட்டை உணர்ந்து கொள்ளலாம்.

மொத்த மக்கள் தொகையில் 16 சதவிகித வாக்கு வங்கியை வைத்துள்ள பட்டேல் சமுதாயத்தின் செல்வாக்குமிக்க சௌராஸ்ட்டிராவில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 30 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் பெற்றிருந்தது. இத்தேர்தலில் பாஜக 23 இடங்களையே பெற்றுள்ளது. வெற்றியை எதிர்பார்த்த இடங்களில் மிகப்பெரிய தோல்வியும் பட்டேல் சமுதாயத் தலைவர்களின் தோல்வியும் பாஜகவின் பின்னடைவைக் காட்டுகின்றன. என்றாலும், பெரும்பான்மை இடங்கள் குறைந்தாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில் பாஜக சமாதானமடைந்துள்ளது எனலாம். கார்திக் பட்டேல் தங்களுக்கொரு பொருட்டல்ல என்கிற பிரச்சாரத்தையும் அவர்கள் தொடங்கிவிட்டனர்.

கேசுபாய் படே்டேலின் வாரிசு கார்திக் பட்டேல்.

குஜராத்தின் மொத்த 182 இடங்களில் வடக்கு பகுதி உட்பட அனைத்திடங்களிலும் பட்டேல் சமுதாயத்தவரின் செல்வாக்குள்ளது. பருத்தி, புகையிலை, சீரகம் போன்றவற்றைப் பயிரிடும் விவசாய குடும்பங்களும், அரசு பணி மற்றும் தொழில்துறைகளில் மேல் நிலையிலிருக்கும் ஒரு சமுதாயமே பட்டேல் சமுதாயம். மூன்று முன்னாள் முதல்வர்களும் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களே (சிமன்பாய் பட்டேல், பி.ஜெ. பட்டேல், கேசுபாய் பட்டேல்). படிதார் அனாமத் ஆந்தோளன் அமைப்பின் (பாஸ்) வழிகாட்டுதலில் இச்சமூகம் உள்ளது. பாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கார்திக் பட்டேல் கேசுபாய் பட்டேலுக்குப் பிறகு பட்டேல் சமுதாயத்தை வழி நடத்துகிிறார் என்கின்றனர் மக்கள். ,

1990 முதல் மூன்றில் இரண்டு சமுதாய் மக்கள் பாஜகவுக்கு துணை நின்று வந்தனர். 2012 – இல் லெவ பட்டேல் சதுாயத்தினரில் 63 சதவிகிதம் பேர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். 15 சதவிகிதம் பேர்கள் காங்கிரசுக்கு வாக்களித்தனர். 2012 – இல் கட்ய பட்டேல் சமுதாயத்தினரில் 82 சதவிகிதம் பேர்கள் பாஜகவுக்கும், 7 சதவிகிதம் பேர்கள் காங்கிரசுக்கும் வாக்களித்தனர். ஆனால் இம்முறை இது தலைகீழாகியுள்ளது. 2016 – இல் பட்டேல் சமுதாயத்தினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தால் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்குச் செல்லும் என்று கருதினர். கருதியபடி வாக்குகள் காங்கிரசுக்குச் சென்றாலும் பெரும்பான்மையான வாக்குகள் காங்கிரசுக்குச் செல்லவில்லை என்பது பாஜகவுக்கு அனுகூலத்தையே வழங்கியுள்ளது.ஈனாலும் இது தொடருமென்னும் பீதி பாஜகவை பயமுறுத்தத் தொடங்கியுள்ளது.

அரை இலட்சத்திலிருந்து ஆயிரத்திற்கு இறங்கிய வாக்குகள்.

குஜராத் பாஜகவின் முக்கிய தலைவர் பட்டேல் சமுதயத்தைச் சார்ந்த ஜித்து வகானி. அவரது பாவ நகர் வெற்றி வாக்குகள் 27000. கடந்த 2012 – இல் சௌராஸ்ட்டிரா தொகுதியில் மிக அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் இவர். அன்று அவர் பெற்ற அதிக வாக்குகள் 53893. பாஜகவின் சௌரவ் பட்டேல் போட்டட் தொகுதியிலிருந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் அதே தொகுதியில் அரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆனால் காங்கிரஸ் மற்றும் பட்டேல் சமுதாயத் தலைவர்களின் செல்வாக்குக் குறைந்து போனதாகக் காரணம் கூறி கார்திக் பட்டேலின் முக்கியத்துவத்தை தாழ்த்தி வருகிறது பாஜக.

அம்ரேலி தொகுதியிலிருந்து காங்கிரசின் பருஷ் தனானி 120000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 30000 மட்டுமே. பட்டுல் சமுதாயம் செல்வாக்கோடு திகழும் வராச்சரோடில் காங்கிரசின் திருபாய் கஜேரா 14000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். கடந்த தேர்தலில் 23000 வாக்குகயள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.  ஹோண்டலி மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பட்ஆடலின மக்கள். இங்கு பாஸக 15000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பார்திக் பட்டேலின் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் வாக்குச் சதவிகிதம் 2012 – ஐவிட குறைந்து போனது.  என்றாலும் முன்பைவிட பாஜகவின் செல்வாக்கு ஹோண்டலியில் குறைந்துள்ளதையே இது காட்டுகிறது.

சௌராஸ்ட்டிரம்

தரியில் காங்கிரஸ் 150000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவின் ஆதரவில் போட்டியிட்ட குஜராத் பரிவர்த்தன் பார்ட்டியோடு போட்டியிட்டு 15000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியுற்றிருந்தது.

லாத்தில் 10000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளபோது கடந்த தேர்தலில் 2700 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது.

சவர்க்குண்டலியில் கடந்த தேர்தலில் 23000 வாக்ககள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததது. இம்முறை 8500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாவ்நகர் மாவட்டத்தில் கரியாதரில் மிகக் கடுமையாகப் போராடி 1800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ரே்தலில் 16000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

பட்டேல் சமுதாயம் பெரும் செல்வாக்கு செலுதிதி வரும் மாவட்டம் கரஞ்ஜில் 35000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ரேர்தலில் 45000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கட்டர்சாமில் 43000 வாக்குகள் வித்தியாசத்தில் 2012 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந“தது. இம்முறை 80000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

காட்ரெஜிலில் கடந்த முறை 1.1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. இம்முறை 28000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லிடம்பாயத்தில் 31000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 2012  இலும் ஏறக்குறைய இதே வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

வராச்சரோடில் 14000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

சூரத் வடக்குப் பகுதியில் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 22000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஜாம்நகர் ரூறலில் 2012 இல் 3300 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் இரகவ்ஜி பட்டேல் வெற்றி பெற்றார். இம்முறை 6300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பட்டேல் மக்களின் பொருளாதார இடஒதுக்கீடு போராட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கிய உஞ்சயில் பாஜக மிகப்பெரிய தோல்வியைப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் ஐந“து முறை எம்எல்ஏவாக இருந்த நாராயண் பட்டேல் புதுமுகம் ஆஷா பட்டேலிடம் 19000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். சௌராஸ்ட்டிராவில் தோராஜி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரேயொரு படிதார் அனாமத் சமிதி வேட்பாளர் லளித் வஸோயா 85070 வாக்குகள் பெற்றுள்ளார். 25000 வாக்குகள் அதிகளவில் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2013 இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதி இது.

பட்டேல் சமுதாயத்தவர்களின் போராட்டத்தில் முக்கிய இடம் வகித்த மோர்பியில் பார்திக் பட்டேலின் நண்பர் பிரிஜேஷ் மிஸ்ரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  இவர் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இத்தொகுதி எம்எல்ஏவான காந்திலால் அமிர்தய்யாவையே இவர் தோற்கடித்துள்ளார்.. மோடியின் தொகுதியான மணிநகரில் பட்டேல் சமுதாயத்தால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதற்கு முன்னர் மூன்று முறை இத்தொகுதியில் மோடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத் ஆர்எஸ்எஸ்ஸின் தலைமை இடமும் இதுவே. 2014 .ல் மோடி டெல்லிக்குச் சென்றதோடு அவரது நம்பிக்கைக்குரிய  சுரேஸ் பட்டேல் இத்தொகுதியில் போட்டியிட்டார்.. இம்முறை அவர் 116113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 40914. மட்டுமே.

சௌராஸ்ட்டிராவின் மிகப்பெரிய தொகுதி இராஜ்கோட் மேற்கு. மூன்று இலட்சம் வாக்காளர்களில் பெரும்பான்மை வாக்காளர்கள் பட்டேலினத்தவர்களே. பாஜக மிகப்பெரிய தோல்வியைப் பெறும் தொகுதி என்று கருதப்பட்ட தொகுதி. ஆனால் முதல்வர் விஜய் ரூபானி மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மிகவும் புகழ் வாய்ந்த இந்திரானில் குரூரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் ரூபானி தோற்கடித்துள்ளார். இத்டதொகுதியைக் கேட்டு வாங்கிய இந்திரானில் குரூரின் நம்பிக்கை பட்டேல் சமுதாயமாக இருந்தது.

சூரத் வடக்கு தொகுதியில் பட்டேல் போராட்டக்காரர்களுக்கு மிகப்பெரும் தோல்வியே கிடைத்துள்ளது. கார்திக் பட்டேலின் தலைமையில் தலைவர்கள் ஒன்றுகூடி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் இதுவுமொன்று. பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்னும் செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்றனர். ஆனாலும் பாஜகவின் தொகுதி பாஜகவுக்கே கிடைத்துள்ளது. காங்கிரஸ் தோற்றுள்ளது.

குஜராத்தில் மோடியும் அமித்சாவும் முக்கியத்துவத்துடன் கவனிப்பது உங்களை அல்லவா என்னும் கேள்வியை பட்டேலிடம் வைத்தபோது அவர் ”ஒரு வருடத்திற்கு மேலாக அப்படித்தான். இனி அடுத்த 50 வருடமும் இப்படியே போகலாம். அது நடைபெறவும் செய்யும்” என்று பதில் கூறினார். பலமான எதிர் முழக்கமாகக் குஜராத் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார் கார்திக் பட்டேல்.