பிரியங்கா முன்னிலையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்

க்னோ

காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அவதார் சிங் பாதனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பொறுப்புக்களை ஏற்ற பிறகு உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ளார்.

பிரியங்கா காந்தி அங்கு 4 ஆவது நாளாக கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் உள்ள மீராபுர் தொகுதியின் தற்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர் அவதார் சிங் பாதனா.

இவர் ஏற்கனவே மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அவர் இன்று பிரியங்கா காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ளார்.