பாராளுமன்றத்தில் காரச்சாரமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சக உறுப்பினர்களை பார்த்து ராகுல்காந்தி கண்ணடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

rahul

பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் இருநாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ரபேல் போர் விமானம் மோசடி குறித்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி மீது எழுப்பினார். ராகுல்காந்தியின் குற்றாச்சாட்டிற்கு பதிலளித்து நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசினார். இதனால் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்வரிசையில் அமர்ந்துக் கொண்டிருந்த ராகுல்காந்தி கண்ணடித்துக் கொண்டே சிரித்தார். பாராளுமன்ற விவாதத்தின் போது ராகுல்காந்தி கண்ணடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, “ ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை ” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின் போது மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்படி காரசாரமாக பேசிய ராகுல் கந்தி அதன்பின்னர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தர். பின்னர் தனது இருக்கைக்கு திரும்பியதும், அருகில் இருந்த எம்பியை பார்த்து கண்ணடித்தார். ராகுல்காந்தியின் இந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ரபேல் மீதான விவாதத்தின் போது ராகுல்காந்தி மீண்டும் கண்ணடித்தது பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்துள்ளது.