ஆம்ஆத்மி அரசு நடத்தும் டில்லி சட்டமன்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்பு!

டில்லி:

டில்லி மாநில சட்டமன்றத்தின் வெள்ளி விழா இந்த மாதம் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்துகொள்கிறார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான எல்.கே. அத்வானி, மோடி, அமித்ஷா கூட்டணியில் புறக்கணிக்கப்பட்டதால், கட்சியின் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி இருந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், டில்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சித்தலைவர் கெஜ்ரிவாலின் வேண்டுகோளை ஏற்று, வரும் 15ந்தேதி நடைபெற்ற டில்லி சட்டமன்றத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பாஜகவுக்கு எதிராக உள்ள ஆம்ஆத்மி அரசின் நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்வது பாஜகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.