மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த மாலன்….! செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம்

சென்னை:

மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த பத்திரிகையாளர் மாலன்….அங்கு  செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் செய்தியாளர்கள் சந்திப்பை விட்டு இடையிலேயே வெளியேறினார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.  வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர் மாலன் உள்பட சிலர், சென்னை பிரஸ் கிளப்பில் செய்தி யாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாததால், செய்தியாளர் சந்திப்பை இடை நிறுத்தி வெளியேறினார் மாலன். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பத்திரிகையாளர்  மாலன், ஓய்வு பெற்ற காவல்துறை டி.ஜி.பி பாலசந்தர், பதிப்பாளர் பத்ரி, தமிழறிஞர் சரஸ்வதி உள்பட பலர் இணைந்து செய்தியளார்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

அப்போது,  அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய மாலன், மோடி மீணடும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார். மோடியின் ஆட்சி தேவை என்பது குறித்து மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதாக கூறியவர், மோடியின்  5 ஆண்டு கால ஆட்சியில்  பெண்களின் வளர்ச்சிக்காக இலவச கேஸ் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பதாக தெரிவித்தவர்,.  சீனாவைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது என பாஜகவுக்கே ஜால்ரா அடித்தார்.

இதனால் கடுப்படைந்த நிருபர்கள்,  நீங்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேச என்ன காரணம் என மாலனிடம் எதிர்கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க மறுத்த மாலன், 4 கேள்விகள் மட்டுமே தன்னிடம் கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதனால், மேலும் கோபமடைந்த நிருபர்கள்,  பா.ஜ.க தூண்டுதலால் இப்படி பேசுகிறீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்ப,

இதோடு செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொள்ளலாம் என்று மாலன்  கூற, அவருக்கும், அவருடன் மேடையில் அமர்ந்து இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் மோடியின் ஆட்சியில் தமிழகம் எவ்வாறு வஞ்சிப்பட்டது என்பதையும்,  நீட் தேர்வு, எட்டுவழிச்சாலை, ஜி.எஸ்.டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ரஃபேல் என தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால், அதற்கு பதில் அளிக்க முடியாமல்,  செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணித்துவிட்டு  பாதியிலேயே வெளியேறினர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.