பா.ஜ.க.வினர் என்னை தாக்கினர்!: ஆட்டோ ஓட்டுநர் கதிர்
பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
கடந்த 16ஆம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர் தமிழிசையடம் கேள்வி எழுப்பினார். அப்போது, பாஜகவினர் சிலர் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவின.
ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பலர் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வந்தனர். ஆட்டோ ஓட்டுநர் கதிர் மது போதையில் இருந்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டனர். அவரை யாரும் தாக்கவில்லை என்று தமிழிசையும் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆட்டோ ஓட்டுநர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழிசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிப்பு வழங்கி ஆறுதல் கூறினார். மேலும்,
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கதிர், தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என கதிர் தெரிவித்துள்ளார். தான் மது அருந்திவிட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜகவினர் தன்னை தாக்கியது தமிழிசைக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.