டில்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் பார்கனா மாவட்டத்தில் உள்ள பரிஷத் நகரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இங்கு அமைதி திரும்ப ஒரு முஸ்லிம் டாக்டரும், அவரது இந்து கம்பவுண்டரும் சில தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

இந்த செய்தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. இதில் எவ்வித குற்றமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இதில் மிகப்பெரிய குற்றம் இருப்பதாக பாஜ யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் சீனிவாச ராகவன் தெரிவித்துள்ளார்.

டாக்டரின் மத நல்லிணக்க செயல்பாடு குறித்த செய்தி குறித்து சீனிவாச ராகவன் கூறுகையில், ‘‘மகாத்மா காந்தி செய்ததே போதுமானது. இதற்கு மேல் நாங்கள் எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. கடந்த 2002ம் ஆண்டில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். எச்சரிக்கிறோம். நீங்கள் அனைவரும் உங்களது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ௧௭ம் நூற்றாண்டில் உங்களது ஆட்சியாளர்கள் செய்த செயல்களுக்கு பழி வாங்க காத்திருக்கிறோம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆளுங்கட்சியில் இளைஞர் பிரிவு தலைவர் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முதல் முறையல்ல. ஏற்கனவே பாஜ தலைவர்கள், ஆதரவாளர்கள் பலர் 2002ம் ஆண்டு நடந்த படுகொலை சம்பவம் எதோ பெருமை பட கூடிய விஷயம் போல கூறி வருகின்றனர். மனசாட்சி இல்லாமல் இதை சமூக வளைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.  தற்போதைய திரிபுரா கவர்னரும், முன்னாள் மேற்கு வங்க மாநில பாஜ தலைவருமான தத்கட்டா ராய் ௨௦௦௨ம் ஆண்டு இந்துகள் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

ஆர்எஸ்எஸ் மகாநகர் பிரச்சார் பிரமுக்கில் உஜ்ஜைன் குண்டான் பேச்ளை இந்தாண்டு வெளியிட்டுள்ளது. அதில் குஜராத்தில் ௨ ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ௧ கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியால் டுவிட்டரில் பாலோ செய்யப்படும் அமிதேஷ் சிங் என்பவர் கடந்த 2015ம் ஆண்டில் மீண்டும் ஒரு படுகொலைக்கு அழைப்பு விடுத்தார். இவரது டுவிட்டர் பதிவுக்காக அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இவர் யுவ முக்தி மோர்ச்சாமவில் துணைத் தலைவராக இருந்தார். இதன் பிறகு பல முறை முயற்சி செய்தும் பாஜ இவரோடு தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இவர் மத்திய பிரதேச பாஜ எம்.பி.யின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஹெடிஎல் என்ற இந்துத்வா அமைப்பு உ.பி. குஜராத்தை போல் மாற வேண்டும். இந்த மாநிலம் காஷ்மீராக மாறுவதற்குள் காப்பாற்றப்பட வேண்டும் என்று எரதிவித்திருந்தது. இந்த கருத்தை வெளியிட்ட பிறகு இந்த அமைப்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. ௨௦௧௫ம் ஆண்டில் மீண்டும் கோத்ரா என்ற புரளியையும் இந்த அமைப்பு கிளப்பிவிட்டது.

இந்த அமைப்பை சேர்ந்த சிலர் டுவிட்டர் பக்கத்தில் மோடியின் பின் தொடர்பாளர்களாக உள்ளனர். சமீப காலமாகவ பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வளைதளங்கள் வன்முறை தூண்டும் வகையிலான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டது.

தற்போது யுவ மோர்ச்சா மூலம் நேரடி தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்பாடுகளுக்கு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் இத்தகைய நபர்களை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வர வேண்டும்.