ஆமதாபாத்:

பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு கூட்டம் குறைந்தால் ‘‘குஜராத் மகனை காண வாருங்கள்’’ என்ற புதிய யுக்தியை பாஜக கையாள தொடங்கியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நேற்று சவுராஷ்டிரா பிராந்தியத்தில் பூஜ், கட்ச், ஜாஸ்தான், தாரி மற்றும் சூரத்தின் கடோதரா பகுதியில் நடைபெற்ற பொது க்கூட்டங்களில் பிரசாரம் செய்தார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கொண்டு கூட்டம் குறைவாக இருந்ததாக எதிர்கட்சிகள் அந்த வீடியோ பரப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மோடி கூட்டத்துக்கு ஆள்சேர்க்கும் பொறுப்பு அ க்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ரேடியோவில் மோடியின் பிரசாரம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியிடப்பட்டனர். கூட்டம் நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் ரதங்களில் வந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அவர்கள் ‘‘குஜராத்தின் மகனை காண வாருங்கள்’’ என மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

ஜாஸ்தான் மற்றும் தாரியில் மோடியின் கூட்டத்தில் குறைவான மக்களே கலந்து கொண்டதால் பாஜக கவலை அடைந்திருப்பதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத் துறை போலீசாரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.