தலித் மக்களை குறி வைத்து பாஜக வன்முறை….மாயாவதி

--

லக்னோ:

எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து நாட்டில் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்தது. நாடு முழுவதும் பரவலாக தலித் சமுதாய மக்கள் நடத்திய போராட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2ம் தேதி நடந்த பாரத் பந்த் வெற்றி பெற்றுள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதனால் ஆளும் பாஜக.வுக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை நடத்தி வருகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் தலில் தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்படுகிறார்கள். இச்சம்பவம் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு பாஜக தலித் எம்.பி.க்கள் யஷ்வந்த் சிங், உதித் சிங், சோட்டே லால் கார்வர், அசோக்குமார் தோக்ரே ஆகிய 4 பேரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பு எங்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக உள்ளது என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.