சென்னை:

மிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்ட செய்தியாளருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழிசை இன்று சென்னை கொடுங்கையூரில் மழை பாதிப்பு குறித்து பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.  “தமிழகத்தில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது” என்று தெரிவித்தார்.

அப்போது பாலிமர் செய்தியாளர் ஜெபர்சன், “மெர்சல் படத்துக்காக  காட்டிய அழுத்தத்தை தமிழக லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஏன் பாஜக காட்ட வில்லை “என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழிசை, “ கேள்வி தவறு. பிரச்சனையை திசை திருப்பவேண்டாம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்றவுடன் பாஜகவினர், நிருபர் ஜெபர்சனை சூழ்ந்துக்கொண்டு தாக்க முனைந்தனர். கொலை மிரட்டல் விடுத்தனர்.

சக செய்தியாளர்களும், போலீஸாரும் ஜெபர்சனை மீட்டு அழைத்துச் சென்றனர்.

“வட மாநிலங்களில் நிகழ்வது போல, கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் போக்கு தமிழகத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறதோ என்ற அச்சத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தி இருக்கிறது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று செய்தியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்கள்.