டில்லி:

“அ.தி.மு.கவை உடைத்ததுபோல பிஜு ஜனதா தளத்தையும் உடைக்க பாஜக  சதித் திட்டம் தீட்டிவருகிறது” என்று பிஜூ ஜனதாதள எம்.பி.  ததகத சத்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரிசா மாநிலத்தின் தேன்கனல்  பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ததகத சத்பதி. பிஜூ ஜனதாளம் கட்சியைச் சேர்ந்த இவர், அக் கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இவர், “செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அ.தி.மு.கவை சதி செய்து உடைத்தது பாஜகதான். அதிமுகவின்  இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கும் பாஜகதான் காரணம்.

அதே போல பிஜு ஜனதா தளம் கட்சியையும் உடைக்க பாஜக  சதித் திட்டம் தீட்டிவருகிறது. கட்சி சின்னத்தை முடக்கவும் திட்டமிடுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று அவர் குற்றம்சாட்டினார்.