பீகார் : வரும் மக்களவை தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் போட்டி

டில்லி

ரும் 2019 மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக 17 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

வரும் 2019 மக்களவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி உள்ளன. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறாது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக சென்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 33 இடங்களை வென்றது.

இந்த முறை பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்காது என பலரும் கூறி வருகின்றனர். மாநில கட்சிகளின் தாக்கம் அங்கு அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் சமதா கட்சி விலகியது. மற்றொரு பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியுடனும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியுடனும் இன்று பாஜக பேச்சு வார்த்தை நடத்தியது.

பேச்சு வார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் போட்டியுடன் என அறிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி 6 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.