மத்தியப் பிரதேச தேர்தல் : சாதுக்களையும் பூசாரிகளையும் சந்திக்க உள்ள பாஜக

போபால்

த்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பாஜக சாதுக்களையும் பூசாரிகளையும் சந்திக்க உள்ளது.

பாஜக கடந்த மூன்று முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறது.    மாநில சட்டப்பேரவையின் ஆயுள் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது.   அதை ஒட்டி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க பாஜகவும்,  புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகளும் கடுமையாக வியூகம் வகுத்து வருகின்றன.

கடந்த மாதம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பு இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தது.   அதை ஒட்டி பாஜக இந்த மாநிலத்தில் 4 ஆம் முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.   இதை ஒட்டி மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோவில்கள், மடங்கள், சாதுக்கள் உள்ளிட்ட விவரங்களை பாஜக சேகரிக்கிறாது.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் ரஜனீஷ் அகர்வால், “மத்தியப் பிர்தேச மாநிலத்தில் அமைந்துள்ள கோவில்கள் மற்றும் மடங்கள் குறித்தும் அதில் உள்ள சாதுக்கள் மற்றும் பூசாரிகள் குறித்தும் தகவல்கள் திரட்டி வருகிறோம்.   விரைவில் அவர்களை சந்தித்து பேச திட்டமிட்ப்பட்டுள்ளது.  அந்த சந்திப்பு எப்போது என்பதும் பேசப்பட உள்ள விவரங்கள் குறித்தும் இப்போது தெரிவிக்க இயலாது” என கூறி உள்ளார்.