நடிகர் சுஷாந்த் மரணம் : பா.ஜ.க. வெளியிடும் ரகசியம்..

நடிகர் சுஷாந்த் மரணம் : பா.ஜ.க. வெளியிடும் ரகசியம்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் மானேஜராக இருந்த திஷா என்ற பெண், சில நாட்களுக்கு முன் ( ஜுன் 8 ஆம் தேதி) மும்பை மலாட் பகுதியில் உள்ள தனது வீட்டின் 14 – வது மாடியில் இருந்து விழுந்து இறந்து போனார்.
இந்த இரண்டு மரணங்களிலும் மர்மம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே, இந்த மரணங்கள் குறித்த ரகசியங்களை சி.பி.ஐ.யிடம் தெரிவிக்கப்போவதாகப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நிதேஷ், மகாராஷ்டிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண் ரானேயின் மகன் என்பதால், அவரது பேட்டி, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதேஷ் ரானே அளித்துள்ள பேட்டியின் சாராம்சம் இது:
‘’சுஷாந்தின் மானேஜர் திஷா, ஜுன் மாதம் 8 ஆம் தேதி ஒரு விருந்தில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சுஷாந்திடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்தார்.திஷா இறந்த பிறகு அவரது காதலரும் , இளம் நடிகருமான ரோகன்ராஜ், தலைமறைவாகி விட்டார்.
சுஷாந்த் மரணமும், திஷா மரணமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
திஷா இறந்த பின்,அச்சுறுத்தி ரோகன் ராஜ், மும்பையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.. அவருக்கு இரு மரணங்கள் குறித்த எல்லா விஷயங்களும் தெரியும் .
ஜுன் ,மாத விருந்தில் என்ன நடந்தது என்பதை ரோகன் பகிரங்கமாகச் சொல்ல வேண்டும்.
ரோகன் சொல்லா விட்டால், இந்த ரகசியங்களை நான் சி.பி.ஐ.யிடம் போட்டு உடைப்பேன்..
இவ்வாறு தெரிவித்துள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ..நிதேஷ் ரானே, இதற்கு முன்பு அளித்த பேட்டியில்’’ ஜுன் மாதம் திஷா பங்கேற்ற விருந்தில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் கலந்து கொண்டார்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
-பா.பாரதி.