தோல்விகளை மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை சாதகமாக்கும் பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ:

பாரதிய ஜனதா கட்சி தனது தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை, அரசிய லாக்கி, தனக்கு சாதமாஙகக முயற்சி செய்து வருவதாக, லக்னோ பொதுக்கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கூறினார்.

பாராளுமன்ற தேர்தல் பணகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு காட்டி வரும் நிலையில், உ.பி. மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் கட்சியான சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து, தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்  லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சி தலைவவி மாயாவதி, தனது கட்சியினர், கூட்டணிக் கட்சிகளுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகளை கூறினார். தொடர்து பகுஜன் சமாஜ் தொண்டர்களிடையே பேசும்போது,  கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாடு கவலை அடைந்துள்ளது,  ஒரே நாளில் இந்தியா விரோதப் போக்கை உருவாக்கி விட்டது.பிரதமர் நரேந்திர மோடி தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அதன் மூலம் அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

நாட்டின் வளர்ச்சியில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது, கடந்த தேர்தலில்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபோன்ற  தோல்விகளை மூடி மறைக்கவே காஷ்மீரின் இன்றைய சூழ்நிலையை பாஜக தங்களுக்கு சாதமாக்க முயற்சி செய்கிறது. இந்த விஷயத்தில், மக்களின்  உணர்ச்சிகளை  தூண்டி, அவர்களை ஏமாற்றுவது மிகவும் விபரீதமான போக்கு என்றும் கடுமையாக சாடினார்.

கார்ட்டூன் கேலரி