எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி! ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

சென்னை:

னக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று, கட்சி அறிவிப்பதாக கடந்த ஆண்டுகளாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வரும் நடிகர்  ரஜினிகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆன்மிக அரசியலுக்கு வருவதாக கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளிடையே அறிவிப்பு வெளியிட்டு, பேசி, மக்களிடையே பரபரபப்பை ஏற்படுத்திய ரஜினி, அந்த சூட்டோடு படங்களையில் நடிக்க கமிட்டாகி விட்டார். கட்சி தொடங்குவது குறித்து, கிஞ்சித்தும் சிந்திக்காத நிலையில், அவ்வப்போது பாஜக வின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேட்டிக்கொடுத்து வந்தார். ஏன், தீவிர பாஜக ஆதரவாளராகவே அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன.

இதனால், தமிழக பாஜகவுக்கு இழுக்க பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டு வந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு  ரஜினியை நியமிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில்கூட, முன்னாள் மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார்.

ரஜினியின் செயல்பாடுகள் பாஜக அரசுக்கு ஆதரவாக இருந்த  காரணமாகத்தான் அவருக்கு, தற்போது மத்தியஅரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,  திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல்எனக்கு பா.ஜ.கவின்காவிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள் திருவள்ளுவரும் மாட்டமாட்டார் நானும் மாட்டமாட்டேன்  என்று கூறினார்.

மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது. திருவள்ளுவர் நாத்திகர் அல்ல ஆத்திகர் என்று கூறிய ரஜினி, பாஜகவில் சேரவோ, தலைவராகவோ என்னை யாரும் சந்திக்கவில்லை, சிலர் அவ்வாறு என்னை நிறுவ முயற்சி செய்கிறர்கள்.

மேலும், செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியில்லை என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அவரது அரசியல் அறிவிப்பு வெறும் வெத்துவேட்டு என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி