Random image

காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி!? கர்நாடக துணை முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தயவுடன், குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், காங்கிரஸ் எம்எல்ஏக் களுக்கு லஞ்சம் கொடுக்க மாநில பாரதியஜனதா கட்சி முயன்று வருவதாக  துணை முதல்வர் பரமேஸ்வரா  குற்றம் சாட்டி உள்ளார்.  இது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக துணைமுதல்வர் பரமேஸ்வரா (காங்கிரஸ்)

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சியும் அருதிப்பெரும்பான்மை பெறாததால், பாஜக ஆட்சியை ஏற்படுவதை தடுக்கும் வகை யில்,  குறைந்த இடங்களை கைப்பற்றிய ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித் தது. அதைத்தொடர்ந்து ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். தற்போது அங்கு ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியாத சோகத்தில் உள்ள பாஜகவினர், ஆட்சியில் பதவி கிடைக்காத அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை ரகசியமாக சந்தித்து பேசுவதாக தவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் துணைமுதல்வர் பரமேஸ்வரா திடீர்  ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. உறுப்பினர்களிடையே சில காரணங்களால் அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மட்டும்தான்.  கூட்டணி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.

அரசுக்கும், அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்படும் என்றவர்,  சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு  என காங்கிரஸ் தலைமை  ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.