திக் விஜய் சிங்கை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் : பாஜக கோரிக்கை

டில்லி

ர் எஸ் எஸ் இயக்கத்தை இந்து பயங்கர வாதிகள் என விமர்சித்த திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கபட வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கடந்த திங்கள் கிழமை இதுவரை பிடிபட்ட அனைத்து இந்து பயங்கரவாதிகளும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களாக உள்ளதாக தெரிவித்தார்.   அவருடைய இந்த கருத்து ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினரிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   இது குறித்து ஆர் எஸ் எஸ் செய்தித் தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது மத்தியப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, “திக் விஜய் சிங் பேசியது மிகவும் கண்டனத்துக்குறியது.  மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சி இது போல தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.     அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் இது போல இந்து பயங்கர வாதிகள் அனைவரும் ஆர் எஸ் எஸ் எனக் கூறியது காங்கிரஸ் மேலிடத்தை திருப்தி படுத்த சொன்னதாகும்.

காங்கிரஸ் தலைவர்கள் இது போல இந்துக்களை கேவலமாக பேசுவது கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர்.  இது போல இந்துக்களையும் ஆர் எஸ் எஸ் அமைப்பையும் பாஜகவையும் கேவலமாக பேசுவதும் அதன் பிறகு மன்னிப்பு கேட்பதும் இவர்களுக்கு வழக்கமாகி விட்டது.  எங்களுக்கு அவருடைய மன்னிப்பு தேவை இல்லை.   நாங்கள் அவரைத் தங்கள் கட்சியில் இருந்து காங்கிரஸ் விலக்க வேண்டும் என கோருகிறோம்” என தெரிவித்துள்ளார்.