ஆளுநர் மூலம் கர்நாடக அரசை பிடிக்க பாஜக முயற்சி : அமைச்சர் புகார்

பெங்களூரு

ளுநர் மூலம் கர்நாடக மாநில அரசை பிடிக்க பாஜக முயல்வதாக அமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டணியில் இருந்து 13 காங்கிரஸ் மற்றும் 3 மஜத உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை ஒட்டி அரசு பெரும்பான்மை இழக்கும் நிலை உள்ளது.  உறுப்பினர்களில் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இது குறித்தி அதிருப்தி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.    கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெறாமல் உள்ளது.  இந்நிலையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வற்புறுத்தி வருகிறார்.    சபாநாயகருக்கு இது குறித்து உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சர் டி கே சிவகுமார், “உச்சநீதிமன்றம் இது குறித்து காலக்கெடு அளிக்க முடியாது என மறுத்துள்ளது.   இது குறித்து சபாநாயகர் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும்.   சபாநாயகர் இது குறித்து முடிவு எடுக்கும் முன்பு பல விவகாரங்களை கவனிக்க வேண்டியுள்ளது.   அதனால் பாஜக காத்திருக்க வேண்டும்.

இது குறித்து காலக்கெடு விதிக்க முடியாது என்பது தெளிவாகி உள்ளது.   விவாதம் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது.  முன்பு வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 10 நாட்கள் எடுத்துக் கொண்டது.  எங்களுக்கு அவசரம் இல்லை. ஆனால் பாஜக அவசரப்படுகிறது.   அவர்கள் அரசைப் பிடிக்க ஆளுநரை பயன்படுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளார்.