பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: மன்மோகன்சிங்

சென்னை:

2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில்,முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் : “என் அரசாங்கத்திற்கு எதிராக  நடத்தப்பட்ட ஒரு பிரசாரம் தற்போது தகர்க்கப்பட்டு உள்ளது. பாஜக  கட்டவிழ்த்து விட்டது பொய்பிரசாரம் என்பது  தற்போது தீர்ப்பின் காரணமாக உறுதியாகி உள்ளது.

கபில்சிபல்

அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  இல்லாத முறைகேட்டை பெரிதுபடுத்தி பாஜக பிரச்சாரம் செய்தது/ எங்களது நிலைப்பாடு வென்றுள்ளது. வினோத் ராய் கற்பனையாக கூறிய கணக்கு பொய் என்று உறுதியாகியுள்ளது.

நான் இது ஊழலே அல்ல என்று தொடர்ந்து கூறி வந்தேன். இது உண்மையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் செய்த ஊழல். அதைத்தான் தற்போதைய தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. வினோத் ராயின் செயல்பாட்டால் தொலைத் தொடர்புத் துறையே சீரழிந்து போய் விட்டது.

வினோத் ராய் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு கொடுத்த பதவி பறிக்கப்பட வேண்டும். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம்

 

இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

You may have missed