குஜராத் தேர்தல் முடியும் வரை ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியிட கூடாது!! பாஜக

அகமதாபாத்:

‘பத்மாவதி’ என்ற வரலாற்று கதை கொண்ட திரைப்படம் குஜராத்தில் வெளியிட தயாராக உள்ளது. இதில் சாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடியும் வரை வெளியிட தடை விதி க்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கவுள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஜடேஜா கூறுகையில், ‘‘ இந்த படத்தில் க்ஸத்ரிய மற்றும் ராஜ்புட் சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வரலாற்றை திருத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. ராணி பத்மாவதி அலாவுதீன் கிஜியை சந்தித்தே கிடையாது. அது போன்ற தவறான காட்சி இந்த படத்தில் உள்ளது.

தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் எந்த சமுதாய மக்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்திவிட கூடாது. அதனால் குஜராத்தில் தேர்தல் முடியும் வரை இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் மூத்ததலைவர் சக்திசின்ஹ் கோலி கூறுகையில், ‘‘தேர்தல் பணிகள் நடந்து வரும் பத்மாவதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. பிரதமருக்கு கடிதம் எழுதலாமே.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ள ஒரு திரைப்படம் வெளியிடுவதை ஒத்திவைப்பது மட்டுமே தீர்வு கிடையாது. அதில் வரலாற்று பிழை இருந்தால் அந்த படத்தை முற்றிலும் வெளியிட விடாமல் தடை செய்ய வேண்டும். படம் வெளியிடுவதற்கு முன்னாள் அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களின் தலைவர்களுக்கு அதை திரையிட்டு காட்ட வேண்டும். ’’ என்றார்.

முன்னதாக 17 மாவட்டங்களை சேர்ந்த க்ஸத்ரிய மற்றும் ராஜ்புட் சமுதாய மக்கள் அமைச்சர்களை ச ந்தித்து ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கர்னி சேனா அமைப்பினர் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தடுத்து ரகளையில் ஈ டுபட்டனர். போஸ்டர்களையும் எரித்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ‘பத்மாவதி’ படத்தில் நடித்த நடிகை தீபிகா ப டுகோனேயின் உருவப்படத்தை ரங்கோலியாக வரைந்த ஒவியத்தை அழித்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP Wants Ban On 'Padmavati' In Gujarat Till Polls, குஜராத் தேர்தல் முடியும் வரை ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியிட கூடாது!! பாஜக
-=-