கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் சில தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தாக்குதலில் ஈடுபடும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அங்கு பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிதில் காலியாக உள்ள  கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார் போட்டியிடுகிறார். இவர் இன்று , நாடியா மாவட்டத்தில் காரில் சென்றபோது, அந்த பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸார் காரை வழிமறித்து கீழே இறக்கி, தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவரை சரமாரியாக தாக்கி, சாலையோரம் உள்ள அடர்ந்த புதருக்குள் தள்ளி விட்டு,  காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடு மாறி அவர் கீழே விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்து, பாஜக வேட்பாளரை மீட்டனர்.

இந்த சம்பவம், அங்கு பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.