டில்லி

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று மாலை கூடும் பாஜக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.

ஜூலை 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் இன்றுமாலை பார்லிமெண்ட் குழுக்கூட்டம் கூடி பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது.

பாஜக தலைவர்களில் ஒருவரான அமித்ஷா கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்க வேண்டி இருப்பதால் இந்த மாநிலங்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என யோசனை தெரிவுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ், மற்றும் ஓ ராஜகோபால் ஆகியோரில் ஒருவர் தெர்ந்தெடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

துணை ஜனாதிபதி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 790 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு 500 லிருந்து 550 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாகத் தெரிகிறது.