ஆட்சியின் இறுதிநாளில் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு! ஆட்சிக்கு வருவோம் என்று உறுதி

டில்லி:

பிரதமராக மோடி பதவி ஏற்றதை தொடர்ந்து, இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாத நிலையில், இன்று முதன்முறையாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

17வது மக்களைக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி கடைசி காலத்தில் இன்று சந்தித்து பேசி வருகிறார். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமித்ஷா,

சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இந்த தேர்தல்தான்  முக்கியமானது, கடந்த  5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி நாள், நாங்கள்  சிறப்பாக பணியாற்றினோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், பாஜக கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகள் சமுதாயத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்கு உதவியாக அமைந்து ள்ளது, 5 ஆண்டுகள் வழங்கிய நலத்திட்டங்கள் வெற்றியைத் தரும் என்று கூறியவர்  தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்,   மீண்டும்  மோடி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது,  முழு மெஜாரிட்டியுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை உள்ளதாக கூறிய மோடி, நாங்கள் கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல,கடந்த 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியிருப்பதாகவும் கூறினார்.

கடந்த 2 தேர்தல்களின் போது ஐபிஎல் தொடர்கள் இங்கு நடைபெறாமல் வெளிநாட்டுக்கு மாற்றப் பட்டன,  தற்போது வலிமையான அரசால் ஐபிஎல், ரமலான், பள்ளி தேர்வுகள் உள்ளிட்டவை அமைதியாக நடந்தன

தற்போது நடைபெற்று வரும் பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடைபெற்று வருகிறது என்றும், இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று  அறுதி பெரும்பான்மை யுடன் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக்கு வரும், நாங்கள் மீண்டும் வரலாறு படைப்போம்  என்றும் கூறினார்.

மேலும்,  5 வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி, உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை.

இவ்வாறு மோடி கூறினார்.