பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: பிரவீன் தொகாடியா ஆரூடம்

புவனேஸ்வர்:

முன்னாள் விசுவ இந்து பரிஷத் தலைவரான பிரவீன் தொகாடியா, ‘அந்தராஷ்டிரியா இந்து பரிஷத்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.இந்த அமைப்பின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரவீன் தொகாடியா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறினார்.

தற்போதைய மோடி அரசு இந்துக்களுக்கான அரசு இல்லை என்றவர், நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பாஜக அரசு தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

மோடி ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார். ஆனால், தற்போது அதை செய்ய முயற்சி மேற்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். அதுபோல விவசாயிகள் பிரச்சினையிலும் கவனம் செலுத்தவில்லை என்று குற்றட்ம சாட்டியவர். நமக்கு இந்து அரசாங்கம் தேவையில்லை என்றும் கூறினார்.

பிரவின் தொகாடியாவின் பேச்சு பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, ‘‘ராமர் கோயிலை மறந்துவிட்டு, முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார் பிரதமர் மோடி’’ என குற்றம் சாட்டிய  ‘அந்தராஷ்டிரியா இந்து பரிஷத்’ என்ற அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, ராமர் கோயில் கட்டவே அவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.  அவரோ கோயிலுக்கு பதிலாக மசூதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார் என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தது.

கார்ட்டூன் கேலரி