டில்லி

குஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியை ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் வரும் 2019  பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.   இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடப் போவதாக அக்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.    காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஒன்றும் கூறாவிடினும் இரு கட்சிகளும் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தொகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளன

நேற்று பீகார் மாநில எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மாயாவதியை நேரில் சந்தித்துள்ளார்.   பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியை புகழ்ந்துள்ள யாதவ் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “அகிலேஷ் யாதவுடன் மாயவதி கூட்டணி அமைத்துள்ளதை உத்திரப் பிரதேச மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.   பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும்.    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோற்று விடும்.

அகிலேஷ் மற்றும் மாயாவதியின் கூட்டணி போட்டியிடப் போகும் அனைத்து இடங்களிலும் நிச்சயம் வெற்றி அடையும்.   பாஜகவால் உத்திரப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது.   அது மட்டுமின்றி பீகாரிலும் பாஜகவை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்” என கூறி உள்ளார்.