‘’விவேகானந்தர் புகைப்படத்தை வீடுகளில் மாட்டி வைத்தால் 35 ஆண்டுகள் பா.ஜ.க.. ஆட்சியில் இருக்கும்’’

 

அகர்தலா :

பா.ஜ.க. வை சேர்ந்த திரிபுரா முதல்-அமைச்சர் பிப்லாப் குமார் தேப், விவேகானந்தர் மீது தீராத பக்தி கொண்டவர்.

அண்மையில் கொரோனா நோயாளிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்களை வழங்கிய அவர், “விவேகானந்தரின் நூல்கள் மன உறுதியை அளிக்கும் வல்லமை வாய்ந்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அகர்தலாவில் நேற்று பா.ஜ.க. மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிப்லாப் குமார் “பேச்சை குறைத்து செயலில் கவனம் செலுத்த வேண்டும், என வலியுறுத்திய விவேகானந்தர் போதனையை அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

“எனது ஊரில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளில் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜோதிபாசு, ஸ்டாலின், மாசே துங் ஆகியோர் புகைப்படங்களை மாட்டி வைத்திருப்பது வழக்கம். அதுபோல் நாமும் ஏன் வீடுகளில் விவேகானந்தர் போட்டோக்களை மாட்டக்கூடாது?

திரிபுரா மக்கள், தங்கள் வீடுகளில் விவேகானந்தர் புகைப்படங்களை மாட்டி வைக்கும் பட்சத்தில், இன்னும் 35 ஆண்டுகள், இந்த மாநிலத்தில் பா.ஜ,க, ஆட்சி நீடித்து இருக்கும்’’ என்று பிப்லாப் கூறினார்.

– பா.பாரதி