பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தையா?….பாஜக பெண் மேயர் கொதிப்பு

மும்பை:

மகராஷ்டிரா மாநிலம் புனே மேயராக இருப்பவர் முக்தா திலக். இவர் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டு புனே மாநகராட்சியின் முதன் பெண் மேயராக கடந்த ஆண்டு பதவி ஏற்றார். இவர் சுதந்திர போராட்ட தியாக பால கங்காதர திலக்கின் பேரன் சைலேஷின் மனைவி.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் நகர பள்ளிகளின் 8ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் ‘‘பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு முக்தா திலக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘இந்தியாவுக்காக அவர் தனது வாழ்வில் 50 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளார். அவர் பல விஷயங்களை செய்த பின்னரும் அவரை பயங்கரவாதத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இது வெட்கக் கேடான விஷயம். இது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஏற்படுத்தப்படும் அவமதிப்பாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

புகைப்படம் உதவி ஏஎன்ஐ…நன்றி