பயங்கரவாதிகள் அட்டூழியம்: காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவதிகள் சிலர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரது வீட்டை சூழ்ந்துகொண்டு அவரை துப்பாக்கியால்  சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஷபிர் அகமது பட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ரக் இ லிட்டர் பகுதியில் வசித்து வந்தவர் ஷபிர் அகமது பட்.  இவர் மாநில பாரதியஜனதா கட்சியில் செயலாற்றி வருகிறார். இஸ்லாமியரான அவர் பாஜவில் இருந்து வந்ததற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்  ஷபிர் அகமது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.30 மணி அளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்,  ஷபிர் அகமதை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பாதுகாப்பு படையினர் உடடினயாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாநில போலீசார் ஷபிர் அகமதுவின் உடலை மீட்டு  சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்