அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் சந்தெளலி மாவட்டத்தின் தாரா ஜிவான்பூர் கிராமத்தில், பாரதீய ஜனதா கட்சியினர், அந்த கிராமத்து மக்களின் விரல்களில் வாக்குப் பதிவிற்கு முன்னதாகவே மையை வைத்து, அவர்களுக்கு தலா ரூ.500ஐ கொடுத்து, வாக்களிக்க முடியாமல் செய்துவிட்டதாய் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“எங்கள் கட்சிக்கு வாக்களிப்பீர்களா?” எனக் கேட்ட அவர்கள், “இனிமேல் உங்களால் வாக்களிக்க முடியாது” என்று கூறி, விரல்களில் மை வைத்து சென்று விட்டனர் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

“புகார் கொடுத்தவர்கள் தற்போது காவல் நிலையத்தில் உள்ளனர். புகாருக்கு ஏற்ப நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். விரலில் மை வைக்கப்பட்டாலும், அவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களே.

வாக்குச்சாவடி மை, தங்கள் விரல்களில் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டு விட்டது என்று அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்” என சந்தெளலி மாவட்ட உதவி கோட்ட நீதிபதி கே.ஆர்.ஹார்ஷ் தெரிவித்தார்.