போலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்

சித்திப்பேட், தெலுங்கானா

வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவதும் அப்போது பணம் கைப்பற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.   தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் தெலுங்கானா மாநிலம் துப்பக் தொகுதியிலும் அவ்வாறே பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் சோதனை நடந்துள்ளது.

இந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.18.67 லட்சம் ரொக்கம் கிடைத்துள்ளது.  அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு வில் பாஜக தொண்டர்கள் சுமார் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை காவல்துறையிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடி உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு வீடியோ பதிவாகி உள்ளது,  இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Thanks : ANI